திருகோணேஸ்வரம் ஆலய கடலில்….. கீழ் உள்ள பழைய தெய்வ திருவுருவச் சிலைகளை அகழ்ந்து எடுக்க முயற்சிகள்!!

திருகோணமலை திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கடல் பகுதியில் முழுமையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு கடலுக்கு கீழ் உள்ள பழைய தெய்வ திருவுருவச் சிலைகளை அகழ்ந்து எடுக்க எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணேஸ்வரம் ஆலயம் மற்றும் கோட்டை ஆகிய தொல்லியல் இடங்களை நேற்று முன்தினம்(11/10/2022) பார்வையிட்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த நிலப் பகுதி இன்னும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை.

அருகில் உள்ள கடலிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவில்லை.

அவற்றில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருகோணேஸ்வரம் ஆலயத்தின் ஒரு பகுதி கடலில் இருப்பதாக நாம் அறிந்த தகவல் இருக்கின்றது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் போது கடலுக்குள் தெய்வ திருவுருவச் சிலைகள் போன்றவை இருப்பதாக அறியகிடைத்துள்ளது.

கடலுக்குள் இருக்கும் தொல் பொருட்கள் மற்றும் தெய்வ திருவுருவச் சிலைகளை அகழ்ந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன்.

தொல் பொருட்கள் என்பது ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ உரியவை அல்ல.

அது நாட்டுக்கும், உலகத்திற்கும் உரிமையானது.

எமது நாகரீகத்திற்கு அமைய நாம் வந்தது போல் நாம் செல்ல வேண்டிய திசையை காட்டுவனவே தொல்பொருட்கள் என்பது.

அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது கடமை.

இந்த இடத்தில் எவ்வித நிரந்தர நிர்மாணிப்புகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது.

அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் தொல் பொருட்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிகளை வழங்க முடியும்.

அதுவரை அனுமதிகள் வழங்கப்பட மாட்டது.

இது தொடர்பான சட்டம் மிகவும் வலுவானது.

அந்த சட்டத்தை அமைச்சரோ, அதிபரோ மீறி செல்ல முடியாது.

இதனால்,

தொல்லியல் சட்டத்தை மீற எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது” எனவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *