தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு….. ரசிகர்கள் படு காயம் – ஒருவர் உயிரிழப்பு!!
அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் இன்று(11/01/2023) தியேட்டர்களில் வெளியானது.
இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும்
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று(11/01/2023) அதிகாலை தியேட்டர்களில் வெளியானது.
இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது.
தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று(10/01/2023) இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று(10/01/2023) இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர்.
இதனால்,
தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
துணிவு மற்றும் வாரிசு படங்கள் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50 இக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று(11/01/2023) திரையிடப்பட்டன.
துணிவு திரைப்படம் இன்று(11/01/2023) அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் தியேட்டர்களில் ரிலீசானது.
இதனை ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும்,
பட்டாசு வெ
டித்தும், இனிப்பு வழங்கியும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
இந்நிலையில்,
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் முண்டி அடித்தபடி நுழைந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் 2 ரசிகர்கள் கேட்டின் மீது இருந்து கீழே குதித்ததில் கண்ணாடிகள் குத்தி ரத்த காயமடைந்தனர்.
இது தவிர மற்றொரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்தார்.
மேலும்,
அதிவேகத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று(11/01/2023) முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்,
இந்தியாவின் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.