இலங்கை பெற்றோலிய ஆய்வக சோதனைகள் தவறானவை….. திலக் டி சில்வா!!
இலங்கை பெற்றோலிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தவறானவை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதி தலைவரான திலக் டி சில்வா (Tilak de Silva) தெரிவித்துள்ளார்.
எரிவாயு சோதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்க ஆய்வகங்கள் ஒரு தொட்டியில் இருந்து மாத்திரமே எரிவாயுவை எடுத்து சோதனை செய்கின்றன.
இது உண்மையில் சரியான சோதனை அல்ல, கப்பலில் இருந்து வரும் வாயு, சோதனை ஏற்கத்தக்கதாக இருக்க சிலிண்டரின் மேல், நடு மற்றும் கீழ் பகுதியில் இருந்து சோதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நாட்டிற்கு உரிய எரிவாயுவை கொள்வனவு செய்ய கட்டளையை பிறப்பிக்கும் போதே எரிவாயுவின் கலவை அறிவிக்கப்படுவதால், வாயுவின் கலவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இலங்கையிலுள்ள எந்தவொரு அரசாங்க ஆய்வகத்திலும் தேவையான வசதிகள் இல்லாததால் இந்த கலவையை சோதிக்க முடியாது, இருப்பினும் இலங்கையிலுள்ள இரு வெளிநாட்டு ஆய்வகங்களால் மாத்திரமே இதனை செய்ய முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.