தமிழர் பண்டிகையன்று யாழில் போராட்டக்காரர்களை விரட்ட நீர்த்தாரை பிரயோகம்….. சம்பூ போட்டு குளித்து மகிழ்ந்த மாணவர்கள்!!

உழவர்களின் தோழனாம் சூரியனுக்கு நன்றி செலுத்துமுகமாக உலகெங்குமுள்ள தமிழர்களால் உணர்வுபூர்வமாக ஆதிகாலந்தொட்டு கலாச்சார முக்கியத்துவமிக்க ஒரு பண்டிகையாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் தினமான நேற்று(15/01/2023)

தேசியப் பொங்கல் நிகழ்வுக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

யாழ்நல்லூருக்கு அண்மித்த பகுதியில் அரச காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் ஆகியோருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன்காரணமாக,

போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நீர்த்தாரையை பயன்படுத்தி சில மாணவர்கள் சம்பூ போட்டு குளித்து மகிழ்ந்திருந்தனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்க விடையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *