ஒரு ரூபா செலவில்லாமல் மிக பிரமாண்டமாக தமது திருமணத்தை நடத்தி முடித்த “நயன் – விக்கி” ஜோடி!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 9 ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா.

அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், , சிவாஜி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் இவர் கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடியன.

இவை தவிர,

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

நடிகை நயன்தாரா குறித்து சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது.

அவர் இந்த இரண்டு நடிகர்களை தான் காதல் செய்யப்போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் கிசிகிசுக்கப்பட்டது.

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

இந்த நிலையில்,

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

 

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ,

கடந்த  வியாழக்கிழமை(09.06.2022) இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டல் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பார்க் ஷெரட்டன் ஸ்டார் நட்சத்திர விடுதியில் உள்ள அறைகள் அனைத்தையும் நயன்தாரா வாடகைக்கு புக் செய்து வைத்துவிட்டார்.

அத்தோடு,

கடற்கரையை ஒட்டி கண்ணாடி மாளிகையை போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டது.

5 நட்சத்திர விடுதிக்கு சமமான வசதிகள்,குளு குளு ஏசிகள் அனைத்தும் கண்ணாடி மாளிகைக்குள் செய்யப்பட்டிருந்தது.

நயன்தாராவின் கண்ணாடி உடை மட்டும் பல லட்சம் ரூபாய் என்றும் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிரெடிஸ்னல் உடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமக்கள் மட்டும் இல்லாமல் விருந்தினர்களுக்கும் மேக்கப் செய்ய மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பெரும்பாலும் சைவ உணவாக இருந்தாலும் அதில் கேரளா மாநிலம் உணவு வகைகள் அதிகம் இடம் பிடித்திருந்தனர்.

இந்த திருமணத்தில் வந்த பிரபலங்கள் வியர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒரு நபருக்கு ரூ.3,500 ரூபாய் மற்றும் Tax வசூலிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆடம்பரம்மாக செய்யப்பட்ட திருமணத்திற்கு கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.

இதனிடையே,

திருமண செலவு அனைத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் நயன்தாராவுக்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை வீடியோ பதிவு செய்து அதை நெட் பிளிக்சில் ஒளிபரப்பு செய்ய பிரத்யேக அனுமதி பெற்றுள்ளது அந்நிறுவனம்.

 

திருணமத்திற்கு வந்த பிரபலங்களின் கைப்பேசிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது பலராலும் மிகவும் விமர்சிக்கப்படட ஒரு விடையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *