30ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது….. இடைக்கால வரவுசெலவு திடடம்!!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டில்,

வரும் 30ம் திகதி இடைக்கால வரவுசெலவு திடடம் தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

அதன்பின்னர்,

செவ்வாய்க்கிழமை(06/09/2022) முதல் வெள்ளிக்கிழமை(09/09/2022) வரை வரவுசெலவு திடடம் மீதான விவாதம் நடைபெறும்.

பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,

இடைக்கால வரவுசெலவு திடடம் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது.

இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால வரவுசெலவு திடடம் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக அதிபர்  ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவுசெலவு திடடமானது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் என

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான முழுமையான வரவுசெலவு திடடம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *