TikTok எடுக்க சென்று கடலில் வீழ்ந்த இளைஞர்….. பருத்தித்துறை முனை கடலில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு TikTok எடுக்க முனைந்த சந்தர்ப்பத்தில் இன்று(01/12/2022) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து,

அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்ததாக மேலும் அறியமுடிகிறது.

சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *