FEATUREDLatestNewsTOP STORIES

வைத்தியசாலை விடுதிக்குள் தூக்கில் தொங்கிய வைத்தியர்….. வடமராட்சியில் சம்பவம்!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital – Point Pedro) பணிபுரிந்த வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் இன்று (12/06/2024) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் கொழும்புவெள்ளவத்தையைச்(Wellawatte) சேர்ந்த 30 வயதுடைய

கிருசாந் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது வைத்தியர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,

பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *