முன்னாள் பெண்போராளியே தனங்கிளப்பு விபத்தில் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி- தனங்களப்பு- அறுகுவெளி- ஐயனார்கோவிலடியில் இன்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *