தளர்கிறது ஊரடங்குச் சட்டம் – சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பணித்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
எனினும், கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவத் தளபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.