தாறுமாறாக உயர்ந்துள்ள அரிசிவிலை – கடும் சிரமத்தில் மக்கள்
அரிசி வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது ஹட்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வெள்ளை அரிசி 150 முதல் 160 ரூபாய் வரையிலும், சிவப்பு அரிசி 160 முதல் 170 ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலைமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், அரிசி விலை உயர்வினால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், உணவுப் பொருட்கள் அதிகரித்த போதிலும், தமது வருமானம் அதிகரிக்கவில்லை எனவும், தற்போது இந்த நிலைமைகளில் வாழ்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நகரின் பல கடை உரிமையாளர்கள், அரிசி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் மொத்த விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.