LatestNews

ஆசிரியர் தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்து பதிவு!!

பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FaceBook பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *