25 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம்….. தாய்வான் மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை!!

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தீவுப்பகுதிகளில் தாக்கப்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாய்வானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில்,

தாரோகோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பாதையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாலியனுக்கு வெளியே உள்ள ஒரு முக்கிய பள்ளத்தாக்கின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இவை தவிரவும் ஹுவாலியனில் உள்ள

சுரங்கப் பாதையில் பலர் சிக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்வான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(03/04/2024) காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் தாய்வானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல்,

தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில்,

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *