இன்று காலை பரீட்சார்த்தமாக பயணித்தது யாழ்தேவி….. வார இறுதியிலிருந்து சேவையில்!!

யாழ்தேவி புகையிரதம் அனுராதபுரம் புகையிரதம் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09/07/2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன்போது, அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் வவுனியா – ஓமந்தை வரையான Read More

Read more

கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது. இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது. மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது. Read More

Read more