200 கடல்வாழ் உயிரினங்களின் உயிரைப்பறித்த எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல்!!

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே தீப்பற்றி கடலில் மூழ்கிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலினால் இதுவரை 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. எக்ஸ்பிறஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுப்பிரிவின் சார்பான பிரதி சொலிசிடர் ஜெனரல் மாதவ தென்னக்கோன், இந்த தகவலை வெளியிட்டார். 176 கடலாமைகள், 4 சுறாக்கள் மற்றும் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக சட்டமா அதிபர் Read More

Read more

தீப்பற்றிய X-Press Pearl கப்பல்; கடற்பரப்பில் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் ஆரம்பம்!!

 X-Press Pearl கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலினூடாக ஆழ்கடல் பகுதியை Scan செய்து, எஞ்சிய பாகங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். இந்த தேடுதல் நடவடிக்கை நாளை (02) நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பின்னர் ஆழ்கடல் பகுதியில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை அகற்றுமாறு கப்பல் நிறுவனம் Read More

Read more

X-Press Pearl: முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா!!

தீப்பற்றிய X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அந்த நட்டஈடு கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். மேலும், மீன்களை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படும் என கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் கூறினார்.

Read more

மட்டக்களப்பிலும் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்!!

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட 1 டொல்பின் மீனும் இன்று (19) கரையொதிங்கியுள்ளது. இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி X-Press Pearl கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன. கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் Read More

Read more

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு Read More

Read more

கடலில் வேகமாக பரவும் X-Press Pearl கப்பலின் எண்ணெய்! செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிவந்தது அறிக்கை!!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த MVXPress pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கடல்சார் மாசுபாட்டை கண்காணிக்கும் கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை ( ​marine pollution surveillance report) சுட்டிக்காட்டுகிறது. கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் சில செயற்கைக்கோள் படங்களை இந்த அறிக்கை பயன்படுத்துகிறது. சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெயின் கறை பரவியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் Read More

Read more

MV X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை காரணம் !! கப்பல் தரை தட்டியது – டைட்டானிக் கப்பலை போல மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது. கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றுமுற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கப்பலின் பின்பகுதி நேற்று மாலை 3 மணியளவில்  தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார். எனினும், கப்பலின் முன்பகுதி Read More

Read more

தீப்பற்றிய கப்பல் கப்டன் உட்பட மூவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!!!

கொழும்பிற்கு அண்மித்த கடற்பரப்பில் தீபரவிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதான பொறியியலாளர் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேவேளை, கப்பலில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் வருகை தந்த மீட்புப் பணியாளர்கள், கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Read more

கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா தெரிவித்துள்ளார். தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர், கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து Read More

Read more

கொழும்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!!

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறைந்த அடர்த்தி கொண்ட பொலி எதிலினின் (எல்.டி.பி.இ) லோட்ரீன் பிராண்டின் சாக்குகளும் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.

Read more