உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, ஈரான் உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என ஈரான் வெளிவிவகார அமைச்சு ஹுசைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read more