வெள்ளவத்தை கடற்கரையில் தலையின்றி சடலம் கரையொதுக்கம்!!

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

கொழும்பு வெள்ளவத்தையில் மூடப்பட்டது தனியார் வங்கி

கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பிரபல தனியார் வங்கி ஒன்று சற்று முன்னர் மூடப்பட்டுள்ளது. குறித்த வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறிப்பிட்ட வங்கிக் கிளை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.    

Read more