அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்….. இன்று முதல் நடைமுறை!!

வாகன பதிவு கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன பதிவு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவு கட்டணம் 3,000 ரூபாய், 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபாய் அறவிடப்படும். இதேவேளை 1600சிசி மற்றும் 80 கிலோவாட்களுக்கு அதிகமான கார்களுக்கு பதிவுக் கட்டணம் 40,000 ரூபாவாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More

Read more