வவுனியா கன்னாட்டி பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்….. தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

வவுனியா – கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று(16/06/2023) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் Read More

Read more

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக Read More

Read more

வீதியில் பயணித்த குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து- தலைமறைவான சந்தேக நபர்!!

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்துச்சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு வவுனியா பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காயமடைந்த நபர் நேற்றைய தினம் இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை ஓட்டிசென்றிருந்தார். இதன்போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வழிமறித்து குறித்த சாரதியை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் Read More

Read more

யாழ்.பல்கலை வவுனியா வளாக தரமுயர்த்தல் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு பெற்றுள்ளமையானது எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே  காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், வவுனியா யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமென அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர் எதிர்வரும் Read More

Read more

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்!!

வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்து பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இவரின் உயிரிழப்புடன், வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை

புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இரவு பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை Read More

Read more