பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதல்….. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!

வவுனியாவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் Read More

Read more

பெண் ஒருவரின் மோட்டார்சைக்கிளில் மோதிய முதியவர் தலை மீது ஏறியது பிறிதொரு வாகனம் ஏறி விட்டு தப்பியோட்டம்….. சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!!

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும் தெரியவருகையில், வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் Read More

Read more

மர்ம நபரால் துப்பாக்கி சூடு…… இளம் பெண் மரணம்!!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, நெடுங்கேணி – சேனைக்குளம் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில், உணவருந்திவிட்டு செல்ல Read More

Read more