யாழ் வடமராட்ச்சி அண்ணாசிலையடி பகுதியில் மாணவி கிணற்றில் விழுந்து பலி!!

யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வேளையில் ஆடுகளை வீட்டிற்கு மேய்த்து வருவதர்காக சென்ற குறித்த பெண் ஆடுகளிற்க்காக குலை பறிக்க முயர்சி செய்த வேளை பின்புறமாக இருந்த கிணற்றில் விழுந்தார். வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் Read More

Read more

J/348, J/350 பிரிவுகளில் “திடீர் மினி சூறாவளி”….. 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு (புகைப்படங்கள்)!!

யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா (T.N Suriyaraja) தெரிவித்துள்ளார். நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ள அதே வேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை Read More

Read more

யாழில மீண்டும் பேராபத்து!!

இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர (Prasad Ranaweera) தெரிவித்துள்ளார். இலங்கையில் கடைசியாக மலேரியா நோயாளர் ஒருவர் 2012 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார். 2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Read more

யாழில் தொடர்ச்சியாக விக்கிரகங்களை திருடியவர்கள் கைது….. மல்லாகம் நீதவான் வழங்கிய உத்தரவு!!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கீரிமலை நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் நவக்கிரி பகுதியை சேர்ந்த இருவர் கடந்த 24ஆம் திகதி காங்கேசன்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் Read More

Read more

17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

கரவெட்டி கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி….. நேற்றும் 07 பேர்!!

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலை மாணவி ஒருவருக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 3ஆசிரியர்களும் இரு மாணவிகளும் உட்பட 7 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி கோட்டத்தில் இயங்கும் பெண்கள் பாடசாலையில் மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருடன் தொடுகையை மேற்கொண்டு முதலுதவி வழங்கிய ஆசிரியர்கள் இருவரும், இரு மாணவிகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கரவெட்டி  கோட்டத்தில் இயங்கும் ஆண்கள் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு Read More

Read more

விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை, தேவரையாளி இந்துக் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பவற்றிலுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

வடமராட்சியில் அதிபர், ஆசிரியர்  மாணவிகள்,  என கல்விச் சமூகத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும்  அவரின் இருபிள்ளைகளுக்கும், தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் என பலருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல பாடசாலைகள் வகுப்பறைகளின் இடவசதி மற்றும் சமூக இடைவெளிகளை கருத்தில் கொள்ளாது அனைத்து மாணவர்களையும் அழைத்து வகுப்புக்களை Read More

Read more

யாழ்.வடமராட்சி கப்பூது வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து…. ஒருவர் உயிரிழப்பு!!

இதில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி இறந்தவருக்கும் Covid-19 தொற்று உறுதி!!

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் உள்ள வாடியில் நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் (வயது – 35) என்பவர் உயிரிழந்திருந்துள்ளார். அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

வடமரட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை “கோமராசி மீன்“!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு Read More

Read more