தடுப்பூசி ஏற்றியவர்களை விட,ஏற்றாதவர்கள் 11 மடங்கு மருத்துவமனையில் அனுமதி…. CDC பணிப்பாளர் Rochelle Walensky இன் கருத்து!!

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த Read More

Read more

அமெரிக்க உளவுத்துறை(CIA)யின் தலைவர்…. இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேர கலந்துரையாடல்!!

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க உளவுத்துறையாகிய சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக ஸ்ரீலங்காவில் சீனா மேற்கொண்டு வரும் முதலீடுகள், மற்றும் சீனப்பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளின் கொழும்பு வருகை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரபல உளவுப்பிரிவான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் Read More

Read more

“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்”அதிரடி அறிவிப்பு விடுத்த ஜோ பைடன்!!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்துள்ளார். மேலும், “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்” என்று அவர் அதிரடியாக கூறினார். காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு வரும் 31-ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள். இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி Read More

Read more

“ஈஸ்டர் தாக்குதல்” ரகசியங்களை அறிந்தவர் திடீரென அமெரிக்கா பறந்தார்!!

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முக்கிய தகவல்களை அண்மையில் அம்பலப்படுத்தியிருந்த தேசிய பாதுகாப்பு பற்றிய ஆய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான, சட்டத்தரணி அசங்க அபேகுணசேகர திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 09ஆம் திகதி வலையொளி தளம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அசங்க அபேகுணசேகர ஈஸ்டர் தாக்குதல் பற்றிய பல விடயங்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, அரச புலனாய்வு பிரிவு முன்னாள் தலைவராகிய நிலந்த ஜயவர்தன பல விடயங்களை மூடிமறைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் Read More

Read more

இலங்கையில் நடைபெறவிருந்த போட்டி திடீரென அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது!!

2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஜனவரி 09 – 16 வரை, லாஸ் வேகாஸில் உள்ள வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் & கேசினோவில் போட்டி நடைபெறும். தீவில் உள்ள COVID-19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக இடம் மாற்றப்பட்டது. ஸ்ரீலங்காவின் கரோலின் ஜூரி திருமதி Read More

Read more

கோர விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்! பயணித்த அனைவரும் பலி – அமெரிக்காவில் துயரம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகொப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது. சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகொப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை Read More

Read more

இலங்கையின் செயற்பாடு -மகிழ்ச்சியில் அமெரிக்கா!!

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக, அந்நாட்டுத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியபோதே, அமெரிக்கத் தூதுவர் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தசந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், Read More

Read more

இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதி நிறுவனமான சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் (ஐ.எஃப்.சி) இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது தொழிலை முன்னேற்றவும் , தனியார் துறை முதலீட்டை வலுப்படுத்துவதும், பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிதி இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் Read More

Read more

இலங்கைக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.   அதில் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் இலங்கையை அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

கோட்டாபய மகிந்த உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்!!

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்காவிற்குச் சென்றுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பசில், அமெரிக்கா செல்லவுள்ள விடயம் கடைசி தருணம் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட தெரியாது என்று தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ச தனது பயணத்தை இரகசியமாக Read More

Read more