பௌத்த விகாரையில் பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு….. பாலியல் தொல்லை!!

ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரைனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் புதன்கிழமை (21/06/2023) குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உனவடுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் குறித்த சுற்றுலாப் பயணி ஹபராதுவ பௌத்த விகாரைக்கு வழமையாக செல்வதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் போதி மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணை அணுகி Read More

Read more

நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More

Read more

ரஷ்யா மூர்க்கத் தனம்….. கலக்கத்தில் உக்ரைன்!!

உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெள்ளம் ஏற்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்யப் படையினர் கைவிட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் மீட்பு பணிகள் Read More

Read more

ஜோ பைடன் உக்ரைனுக்கு விஜயம்….. உக்ரைனில் இரவு முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்ய இராணுவம்!!

ஜோ பைடனின் உக்ரைன் விஜயத்தின் பின்னர் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் உட்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் Read More

Read more

உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் – ஒலிக்கும் ரஸ்ய கீதம்….. வெளியாகிய எச்சரிக்கை!!

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி Read More

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read more

ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை, மறுபக்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை குழப்பும் புடின்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது. ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள ‘பிளெசெட்ஸ்க்’ (Plechetsk) விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு “கம்சட்கா தீபகற்பத்தில்” (Kamchatka Peninsula) தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி “விளாடிமீர் புட்டின்” தெரிவித்துள்ளார்

Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ரஷ்யா!!

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் Read More

Read more

மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம்

உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் நிகழ்வுகள் வருடாந்தம் மே 9 ஆம் திகதியன்று மொஸ்கோ ரஷ்ய செஞ் சதுக்கத்தல் நடத்தப்படுவது வழமை. அன்றைய நாளில் இராணுவ வெற்றி அணிவகுப்பு மற்றும் அரச தலைவர் விளாடிமிர் புடினின் உரை ஆகிய Read More

Read more

படிப்படியாக ரஷ்யா படைகளை அடித்து விரட்டும் உக்ரைன் படைகள்….. உக்ரைன் ராணுவத்தளபதி வெளியிடட புகைப்படங்கள் மற்றும் செய்தி!!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மக்காரிவ் என்ற நகரை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய படையினரை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டதாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக தலைநகர் கீவை அண்மித்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன. இவ்வாறு ரஷ்ய படை ஆக்கிரமித்திருந்த மக்காரிவ் என்ற பகுதியிலிருந்தே அந்தப்படையை ஓட ஓட விரட்டியடித்ததாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார். Read More

Read more