கிணற்றில் விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி புன்னைநீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து. இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது 18)என்ற மாணவியை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .      

Read more

இலங்கையில் மத பதற்றம் வெடிக்கும் சாத்தியம்….. எச்சரிக்கை தகவல்!!

இலங்கையில் சிலர் பதற்றத்தை தூண்டும் வகையில் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அண்மை நாட்களில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னணியிலேயே, இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருஸாந்த இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “இலங்கையில் அண்மை நாட்களில் மதங்களுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த Read More

Read more

நடு வீதியில் வாள்வெட்டு….. கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!!

காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பு நிற காரில் வந்த மூன்று பேர் கணவன் மற்றும் மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். சம்பவத்தில் ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார், இவர் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த பெண் கராப்பிட்டிய போதனா Read More

Read more

பந்தயத்தால் நடந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

Read more