கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read more

உலகை உலுக்கிய Super fast – Coromandel அதிகவேக தொடருந்துகளின் மோதல்….. வெளியாகின உண்மை விபரங்கள்!!

ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி Coromandel அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி Super fast அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு-ஹவுரா தொடருந்து நேற்று முன்தினம்(02/06/2023) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட தொடருந்தின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அந்த Read More

Read more

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழி அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும், அதனால், அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்….. பெருமளவில் வீணாக வழிந்தோடும் டீசல்!!

ரம்புக்கன புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் டீசல் கொள்கலன் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. டீசல் கொள்கலன் ரயில் நிறுத்தியிருந்த தண்டவாளத்தில் பயணிகளை ஏற்றி வந்த ரயிலை நிறுத்த முற்பட்ட போதே மோதி Read More

Read more

புகையிரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்….. உடல் சிதறி ஒருவர் மரணம்!!

சீதுவை – தலுபொத வீதி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் தொடருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கட்டுநாயக்க, குரண பிரதேசத்தை சேர்ந்த  27 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சீதுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

வட்டவளையில் தடம்புரண்டது புகையிரதம் ஒன்று!!

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதம் இன்று (18) அதிகாலை கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த புகையிரம் கண்டி – பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.##train deraile இதனால், புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். குறித்த புகையிரம் Read More

Read more

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read more

மலேசியாவில் நடந்த முதல் கோர விபத்து! 200இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

##மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன் சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது. பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால் இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு Read More

Read more