வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் திறந்தாலும் மக்கள் நடமாட்டம் யாழில் பயங்கர வீழ்ச்சி!!
நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன் வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்துள்ளன. எனினும், மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றனர். அதேவேளை, பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more