தொடர்ந்து பல நகை வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் பதிவு!!

வவுனியாவில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது. குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இறம்பைக்குளதில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கோவில்குளத்திலும் பெண்ணொருவரிடம் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more

ஆடையகமொன்றில் கல்லாப்பெட்டியை உடைத்து 2.5 கோடி ரூபா கொள்ளை!!

கடவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் பணப் பெட்டகத்தை உடைத்து 27 மில்லியன் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள 32 வயதான குறித்த சந்தேக நபர் குருணாகல் பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. இவர் வங்கிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read more

பிரபல பாலிவுட் நடிகை “சோனம் கபூர்” வீட்டில் 2.4 கோடி இந்திய ரூபா மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை!!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையின் மதிப்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா. திருமணம் முடிந்தபின், இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் பற்றியும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். தனது கணவருடன் Read More

Read more

நகையை திருடியதை ஒத்துக் கொண்டார் பிரபல நடிகை!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரூபா தத்தா திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரூபா தத்தா. இவர் சமீபத்தில் இயக்குனர் ‘அனுராக் கஷ்யாப்’ தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடியதாக நடிகை ‘ரூபா தத்தா’ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விழாவிற்கு Read More

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும், 8 அரை பவுண் நிறையுடைய சுமார் Read More

Read more

பட்டப்பகலில் யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!!

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் Read More

Read more

யாழில் வழிப்பறி கொள்ளையர்களிடம் பெருந்தொகை பணத்தை பறிகொடுத்த முதியவர்!!

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரிடமிருந்து ஒருதொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடமே இனம் தெரியாத வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு, வீதிக்கு வந்த போது, துவிச்சக்கர வண்டியில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more

மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் Read More

Read more

ஒரே இரவில் ஐந்து கடைகள் ஓடு பிரித்து கொள்ளை!!

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள் அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து நுழைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டிச் சென்றிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறப்பதற்காக சென்ற போது கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். Read More

Read more

16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!

16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more