கோவில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு!!

தமிழ் நாட்டின் தஞ்சாவூரிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த சம்பவத்தை சிலர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் அப்பர் குருபூஜையின் 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரினை மக்கள் வடம் Read More

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும், 8 அரை பவுண் நிறையுடைய சுமார் Read More

Read more

“முழங்கால் தெரிய ஆடை அணிந்து வரும் பெண்களுக்குக்காக” நல்லூரில் புதிய நடைமுறை!!

நல்லூர் ஆலயத்தில் இந்து மத பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறை நேற்று  அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலயத்திற்குள் சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

Read more

கோவில் கட்டி – கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு!!

பல படங்களில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு, தனது சொந்த இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இவர் காமெடி வேடங்கள், கதையின் நாயகன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர்.கண்ணன் இயக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் கடவுள் பக்தி Read More

Read more

எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே….. இளைஞர்களின் முயற்சியில் வெளியான காணொளிப்பாடல்!!

ஈழத்து பெரும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற நல்லூர் ஆலய பெரும் திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சியில் எம்பெருமானுக்கு “எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே…!” எனும் பொருள்பட புதிய காணொளி பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளை தொல்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரோஜன் எமுதியிருக்க, A.R.அபியின் குழுவின் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் ஒத்திவைப்பு!!

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில், இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் Read More

Read more