பாடசாலை நேரம் ஒருமணத்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்!!

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது

Read more

அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மகனும், ஆசிரியரும் கையும் களவுமாக சிக்கினர்!!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின்  கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,   தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் Read More

Read more

அதிபர், ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது!!

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. இது குறித்து நேற்றைய தினம் அம்பாறை வலய கல்வி அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலய கல்வி கணக்காய்வாளர்களின் கூட்டத்தில் கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக Read More

Read more

எதிர்வரும் திங்கள் முதல் பழையபடி பாடசாலைகள் நடைபெறும்!!

எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு வரவழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை வௌியிடவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் Read More

Read more

ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் குதித்த ஆசிரியர் உதவியாளர்கள்!!

மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக இருக்கின்ற 380 பேருக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஆசிரியர் உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது இன்றைய தினம் கண்டியில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆசிரியர் உதவியாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் பல வருடங்களாக போராட்டம் செய்து வருகின்ற பொழுதும் எங்களுக்கான நியமனத்தை வழங்குவதில் மத்திய மாகாணம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. ஏற்கனவே, பல முறை எங்களுக்கு நியமனம் வழங்குவதாக கடிதம் அனுப்பியிருந்த போதிலும் Read More

Read more

இரண்டாம் தவணை இன்றுடன் முடிவு!!

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகின்றதாக என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

ஹட்டனில் இன்று அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!!

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் 03 மணிக்கு அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுட்டனர்.   மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட Read More

Read more

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்று பேச்சுவார்த்தை….. ஜோசப் ஸ்டாலின்!!

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் () தெரிவித்துள்ளார். அத்துடன், பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதன்போது, தங்களது வேதன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட Read More

Read more

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read more

பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்…. அமைச்சர் சரத் வீரசேகர!!

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் அழுத்தம் கொடுத்தால் அதிபர், ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இந்த எச்சரிக்கையை விடுத்த சரத் வீரசேகர, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக Read More

Read more