யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்தரீதியாக பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்த்தியதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.

Read more

நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம்… வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்….. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு!!

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை “நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம். வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம். இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன்னகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் Read More

Read more

அறுபதுக்கும் மேலான உலக நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்களும் திறனாளர்களும் ஒன்றுகூடி நடந்தேறியது ‘உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு’!!

லண்டனில் இடம்பெற்றுவரும் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்களின் பூகோள மாநாட்டின் அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. அறுபதுக்கும் மேலான உலக நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்களும் திறனாளர்களும் ஒன்றுகூடி வந்த எட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டன் மாநகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்று இருந்தது. மே 5,6,7 நாட்களில் நடைபெற்ற தி-ரைஸ் – எழுமின் அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி ஜாம்பியா, Read More

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை கொண்டாடிய சிங்கள பாடலை எழுதியவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘”யுபோ வெவ மகாராஜனேனி” (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் ‘சுனில் ஆர்.கமகே’ பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாடலை இங்கே click செய்து பார்வையிடுங்கள்….. காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று Read More

Read more

சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

Read more

பூநகரி கெளதாரிமுனையில் உள்ள கணேசா ஆலயத்திலும் தொல்லியல் ஆய்வுகள் (படங்கள்)!!

கிளிநொச்சி பூநகரி கெளதாரிமுனையில் உள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கணேசா ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த ஆலயத்தில் வரலாற்றுத்தொன்மையான சான்றுகள் இருக்க கூடும் என்ற ரீதியில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் ஆலய வளாக பகுதியில் அகழ்வு பணியை நேற்றைய தினம் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாணங்களுக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருனி Read More

Read more

28 ஆண்டுகள் கடந்தும் கூட மாற்றமொன்றை அவதானிக்க முடியவில்லை – புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுவதே ஒரே வழி என்கிறார்……. எம்.எ.சுமந்திரன்!!

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பிரதானமாக தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே, புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாகவே அதனை நிவர்த்தி செய்ய முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு உருவாக்கம் என்றால் என்ன? எவ்வாறு? யாருக்காக என்ற தொனிப்பொருளில் சமூக நீதிக்கான தேசிய Read More

Read more

3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை தமிழர் பகுதியில் விடுவிக்க தீர்மானம்….. மஹிந்தானந்த அளுத்கமகே!!

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் Read More

Read more

லண்டனில் மரணமான தமிழ் குடும்பம்….. காரணம் புகைப்படங்கள் உள்ளே!!

தென்கிழக்கு லண்டன் பெக்ஸ்லிஹீத் பகுதியில் தமிழ் குடும்பத்தின் நான்குபேர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக இறந்தமை அப்பகுதி சமுகத்திடையே பெரும் சோகத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து யோகன் தங்கவடிவேல் என்ற தந்தை தனது மனைவி நிரூபாவின் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிற்கு விரைந்தார். அதில், அவர் “தீ, நெருப்பு” என்று அலறினார். அவர் மிகவும் தாமதமாக வந்ததால் தனது உறவுகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினரை நேரில் பார்த்தார். அவர் Read More

Read more

யாழிலும் மாவீரர் நாள் விளக்கேற்றலிற்கு தடை!!

நாள் நினைவேந்தல்களுக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. கோப்பாயில் மாவீரர் துயிலும் Read More

Read more