லெபானாக மாறும் இலங்கை….. எம்.ஏ சுமந்திரன் பாராளுமன்றில் பகிரங்கம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால்,   என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வுகூறியிருந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கோட்டாபயவின் வரி ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், கிரிஸ் நாடு எதிர்கொண்ட திவால் நிலைக்கு செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்ததாக சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர், நாட்டின் தலைமையில் இருந்து விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றபோதும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார். Read More

Read more

எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   22 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என மேலும் குறிப்பிடப்படுகின்றது.

Read more

தொடங்கிவைக்கப்பட்டது முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களின் போராட்டம்!!

முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் போராட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் காலை 7.00 மணிக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர். இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையில் மேற்கொள்ளப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.சிறீதரன், இரா.சாணக்கியன் Read More

Read more