திங்கட்கிழமை முதல் இரு வாரத்திற்கு ‘பாடசாலைகள்’ மற்றும் ‘பொதுத் துறை அலுவலகங்கள்’ இணையவழியில்!!

இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை (20/06/2022) முதல் பொதுத் துறைக்கு இரண்டு வார கால வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   இதன்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தையும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வார கால இணையவழி கற்றல் முறை திட்டத்தையும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான Read More

Read more

இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிக்க அரசு முடிவு!!

வீ-மொழி என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இணைய வழியாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஆங்கிலம், பிரன்சு, ஸ்பெயின், ஜேர்மன், இத்தாலி,ஹிந்தி , ரஷ்யா, ஜப்பான், சீன மற்றும் அரபு ஆகிய மொழிகளை பயில்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக Read More

Read more

உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள். குறித்த வைத்தியசாலையே பரீட்சை நிலையமாகவும் செயற்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சை நீண்ட கால தாமதமான பரீட்சை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காகவே இவ்விசேட Read More

Read more

முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் ஏப்ரலில் ஆரம்பம்!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மற்றும் பரீட்சைகள் சம்பந்தமாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கண்டியில் விடயங்களை தெளிவுப்படுத்தினார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து மீண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. பாடசாலை கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்படும். 5 Read More

Read more

இணையவழியில் மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வைத்தியர் எச்சரிக்கை

இணையத்தின் மூலமான கல்வி நடவடிக்கையால் மாணவர்கள் இணைய விளையாட்டுகளில் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றார்கள் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், பாடசாலை கல்வி முறை குறைவடைவதால் மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர் வைத்தியர் தர்சனி ஹெட்டியாராச்சி (Darshani Hettiarachchi) சுட்டிக்காட்டுகிறார். இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, இணைய கல்வி முறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியைத் தொடர தயங்கலாம். மேலும் சில மாணவர்கள் Read More

Read more

திறக்கப்படவுள்ள பாடசாலைகள்?? – கல்விஅமைச்சர் வெளியிட்ட தகவல்!!

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்களைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.

Read more

பணி பகிஸ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகிறது. அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேற்படி பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

முதலாம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கல்வி முறையா? எதிர்க்கும் அமைச்சர் பந்துல!!

இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில் இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் கல்வி கற்றுக்கொடுப்பதை தெளிவாக எதிர்க்கின்றேன். யுனிசெப் Read More

Read more