மூன்றும் நடக்காவிடின் இலங்கை “இருளில் மூழ்கும்”!!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 1. போட்டி ஏல முறையைப் பின்பற்றாமல், உள்ளூர் ஏலதாரர்களுக்கு எந்த சமமான வாய்ப்பையும் வழங்காமல், நாட்டின் காற்று மற்றும் சூரிய வளங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தல். 2. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தைத் திருத்துதல், கோரப்படாத முன்மொழிவுகள் Read More

Read more

முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள். மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள். இன்று(26/05/2022) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். Read More

Read more

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை….. ஆர்ப்பாட்டக்காரர்கள் – காவல்துறையினர் இடையில் முறுகல்!!

கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   இதனையடுத்து, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் பெருந்திரளான காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், Read More

Read more

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்ககாரர்களை இணைக்க பிரதமர் முடிவு….. அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ!!

சிறிலங்கா நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம‘ ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என புதிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைத் தொடராலாம். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை Read More

Read more

“கோட்டா கோ கம”விற்கு சைக்கிளில் வன்னியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நபர்!!

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20/05/2022) மாலை வவுனியாவை சென்றடைந்தது. வவுனியாவை அடைந்த அவர் இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார். கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் Read More

Read more

நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read more

கொழும்பில் பதற்றம்….. மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!!

கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களில் சிலர் கோட்டா கோ கமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை கையளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

போராட்டத்தில் இறங்கினர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இவேளை குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, அரச தலைவர் மாளிகை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எங்கு செல்லவுள்ளது என்பது Read More

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

கொழும்பில் மீண்டும் சற்று பதற்றம் ….. குவிக்கப்பட்டுள்ள காவல்படை!!

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்   இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு – ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More

Read more