நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட அமரகீர்த்தியின் பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!!

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையானதால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.   அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் Read More

Read more

நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!!

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (மே – 12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.   இன்று நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் Read More

Read more

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read more

கலவரத்தை ஏற்படுத்த அழைத்து வரப்பட்ட கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து திடுக்கிடும் தகவல்!!

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தில் அரச ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கும்பல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது. குறித்த வன்முறை சம்பவங்களுக்காக சிறையிலிருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுர்த்தி பயனாளர்களும் அச்சுறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   Read More

Read more

வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள தே‌தி குறிப்பிடாமல் வேலை நிறுத்த போராட்டம்!!

பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.   வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.   இன்று(10/05/2022) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.   அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று(09/05/2022) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க Read More

Read more

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் பல துப்பாக்கிச் சூடுகள்!!

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் சற்றுமுன் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நீடிக்கும் நிலையில் துப்பாக்கிச் சூடு Read More

Read more

பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலவரத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படடர்!!

பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ‘அமரகீர்த்தி அத்துகோரள’ நிட்டம்புவை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு Read More

Read more