ஒரே இரவில் ஐந்து கடைகள் ஓடு பிரித்து கொள்ளை!!
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள் அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து நுழைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டிச் சென்றிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறப்பதற்காக சென்ற போது கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். Read More
Read more