வடக்கு கிழக்கில் ஹர்த்தால் இல்லை….. வடக்கு – கிழக்கு தமிழ் புத்திஜீவிகள் அமையம் !!!

இன்று  வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் இல்லை. பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளும் வழமை போன்று இயங்கும் என வடக்கு கிழக்கு தமிழ் புத்திஜீவகள் அமையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை காரணங்காட்டி தென்னிலங்கையை சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தால் என அழைப்பு விடுத்துள்ளன. இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் வழமை போன்று தத்தமது இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலை Read More

Read more

கலவரக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூட்டு தாக்குதல்….. ஒருவர் மரணம் – கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

ரம்புக்கனையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்   தற்போது ரம்புக்கனை பகுதியில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read more

இன்றிரவு முதல் அதிகரிக்கிறது பாண் மறறும் இதர வெதுப்பக பொருட்களின் விலைகள்!!

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/=  ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.   இன்று (19/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   மேலும், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதர வெதுப்பக பொருட்களின் விலைகள் 10/-.ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 10/= Read More

Read more

கொழும்பை வந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் சேர்ந்தது மற்றுமொரு அணி!!

மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி படையெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளனர்.   கொழும்பின் மொறட்டுவை பகுதியை வந்தடைந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காலிமுகத்திடலை நோக்கி நகரவுள்ளதாக தெரியவருகிறது.   தற்போது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம்” என்ற அடிப்படிடையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

விலையேற்றத்துடன் தளர்த்தப்பட்டன எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும்!!

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது Read More

Read more

உலகவங்கி இலங்கை நிலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!

தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.   நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.   உயர்மட்ட கடன் மற்றும் கடன் சேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெளிப்புற ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்று உலக வங்கி Read More

Read more

நள்ளிரவு முதல் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலைகள்!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.   லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.   இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு விபரம் வருமாறு, • பெட்ரோல் 92 – ரூ.338 • Read More

Read more

எந்த சூழ்நிலையிலும் பதவி விலகப் போவதில்லை….. ஜனாதிபதி கோட்டாபய!!

எந்த வகையிலும் அரச தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அரச தலைவர் இதனைக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   இதன்போது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தான் செயற்படுவதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.   அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மக்கள் கொழும்பு காலிமுகத் திடல் Read More

Read more

நாளை யாழில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம்!!

ஜனநாயகததிற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.   இதேவேளை, குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த ஏழு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.   போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் போராட்டத்தில் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more