கோரவிபத்தில் சிக்கி சிதறுண்டது அம்புலன்ஸ்

பண்டாரவளை பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும், எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர். தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு Read More

Read more

விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்புக்கள் மற்றும் அவரது வருமானங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 7 கோடியை ஊதியமாக பெறுகிறார். அதே சமயத்தில், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு Read More

Read more

வவுனியா கன்னாட்டி பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்….. தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

வவுனியா – கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று(16/06/2023) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் Read More

Read more

இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் Read More

Read more

வெளியாகவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்கிழக்கு நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் ஒப்பட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் இருந்த சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லர் மீசை வரைந்து Read More

Read more

தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். கனரக Read More

Read more

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பாணின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read more

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட பாரிய விபத்து!!

கவனக்குறைவால் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து பாதுக்க-கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கு பின், உந்துருளி விபத்து நடந்த இடத்தில் இருந்து 98 மீட்டர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.  

Read more

பந்தயத்தால் நடந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

Read more