ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. சாதாரணமாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் Read More

Read more

அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்…… ஜனாதிபதி கோட்டாபய!!

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முழுமையான இணக்கத்தை கட்சித் தலைவர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

பத‌வி விலகல் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவ‌ல்!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.   அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்போது, தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

Read more

கோட்டாபயவை பதவி விலகவைக்க பல கட்சிகளின் தலைவர்கள் கூட்டு தீர்மானம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் அரச தலைவர் பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் முற்றாக மறுத்துள்ளார்.   கோட்டாபய Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more