அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது….. பிரதமர் ரணில் விக்ரமசிங்க!!

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலக செலவுகளை குறைக்க முடிவு Read More

Read more

புதிய அமைச்சரவை இன்று பதவி பிரமாணம்!!

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சு பதவிகள் மட்டுமே இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. அரச தலைவர் உடன் பதவி Read More

Read more