நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!!

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதன்படி 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும் குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் Read More

Read more

நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read more

ஆறு வாரங்களில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!!

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நாட்டில் பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கிறோம். சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டன. சீனாவில் Read More

Read more

18 – 30 வயதினருக்கு தடுப்பூசி…. திட்டம் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!!

18 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (02) அறிவித்தார். இந்த தடுப்பூசி திட்டம் மாவட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். 18 – 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த வயதுக் குழுவில் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 18 – 30 வயதுக்குட்பட்ட சில Read More

Read more

நாட்டில் தடுப்பூசி பெற மறுத்தால் நடப்பது என்ன!!

நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு Read More

Read more

உடனடியாக தயாராகுங்கள் – கோத்தாவின் அதிரடி பணிப்புரை!!

பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்!!

சீனாவிலிருந்து மேலும் 2.3 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 10 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக சற்றுமுன் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளோம். அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி Read More

Read more

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கடடாயம்!!

2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Read more

கொழும்பு மாவட்ட மக்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 150,000 பேர் இதுவரை COVID-19 தடுப்பூசியை போடவில்லை என கொழும்புமாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் 557 கிராம அலுவலர் பிரிவுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். 30 முதல் 59 வயதிற்குட்பட்ட 99,373 பேர் தடுப்பூசியை ஏற்றவில்லை.அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 முதியவர்கள் தடுப்பூசியை எடுக்கவில்லை. தடுப்பூசி போடப்படாத இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் Read More

Read more