21 இற்கு பின்னர் நாடு திறக்கப்படுமா கோட்டாபயவின் உத்தரவு!!

நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே தேசிய கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் ஜனாதிபதி குறித்த அறிக்கையை கோரியுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது. இதனையடுத்து Read More

Read more

நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் விசேட அறிவித்தல் விடுத்த இராணுவ தளபதி!!

நாட்டில் எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர், வழமை போன்றே தொழிலுக்கு Read More

Read more

மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக்கட்டுப்பாடுகள்?

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றையதினம் சுகாதார அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more