நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. ஸ்தலத்திலே பலியானார் குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இரவு 7மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் வயது 51 என்பவரே உயிரிழந்துள்ளார் Read More

Read more