100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளை!!

அரசாங்கத்திற்கு எதிராக நாளை பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசு பதவி விலகக் கோரி 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இவற்றைவிட, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு எதிராக நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. 2,40,000 ஆசிரியர்கள் மற்றும் 16,000 Read More

Read more

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆப்பு!!

ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக எந்த வித இடமாற்றங்களையும் நடைமுறைப்படுத்தாத நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது. ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது. இந்த நிலைமை நீடிக்காது இருக்க இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க இணைய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் Read More

Read more

இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிக்க அரசு முடிவு!!

வீ-மொழி என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இணைய வழியாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஆங்கிலம், பிரன்சு, ஸ்பெயின், ஜேர்மன், இத்தாலி,ஹிந்தி , ரஷ்யா, ஜப்பான், சீன மற்றும் அரபு ஆகிய மொழிகளை பயில்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக Read More

Read more

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட முக்கிய தகவல்!!

2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய, பாடசாலைகளின் Read More

Read more

எதிர்வரும் திங்கள் முதல் பழையபடி பாடசாலைகள் நடைபெறும்!!

எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு வரவழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை வௌியிடவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் Read More

Read more

இரண்டாம் தவணை இன்றுடன் முடிவு!!

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகின்றதாக என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

அரச, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலை டிசம்பர் விடுமுறையில் மாற்றம்!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி வரை விடுமுறையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2022ஆம் Read More

Read more

நாவலரின் 192 ஆவது குருபூசை தினம்…..அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்க யாழில் திட்டம்!!

ஆறுமுக நாவலர் பெருமானின் 192 ஆவது குருபூசைத் தினத்தை முன்னிட்டு பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று யாழ்ப்பணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது Read More

Read more

மீண்டும் பாடசாலைகள் மூடப்படும்….. டொக்டர் தீபால் பெரேரா!!

பாடசாலை மாணவர்களிடையேயும் தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ளதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும் என வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போது இலங்கை முழுவதும் கொவிட் தொற்றுக்கு Read More

Read more

ஹட்டனில் இன்று அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!!

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் 03 மணிக்கு அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுட்டனர்.   மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட Read More

Read more