திடீரென அதிகரித்தது முட்டையின் விலை!!
இலங்கையில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more