பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும்…..சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்!!

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேதனம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை தமது சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. எனினும், அதற்கான தீர்வு இதுவரையில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலை தொடருமாயின் தாம் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல நேரிடும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எம் ஜோதிரட்ன குறிப்பிட்டுள்ளார். Read More

Read more