உடன் அமுலாவும் வகையில் அதிகரிக்கப்பட்ட்ன விலைகள்!!

உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.   இதன்படி, 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கமைய சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால் Read More

Read more