ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கு அனைத்து சிறப்பு அங்காடிகளிலும்!!

சதொசவிற்கு மாத்திரம் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி அரிசி தொகை நிறைவடையும் வரை அவற்றை சிறப்பு அங்காடிகளுக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன், நுகர்வோர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது ஐந்து கிலோ கிராம் அரிசி விநியோகிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read more

அரிசி விலையில் வீழ்ச்சி…. நாடு மகிழ்ச்சியில்!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.120 ஆகவும், நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.110 ஆகவும், வெள்ளை பச்சை அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.98 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாட்டு அரிசி மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 400 டொலராகவும், வெள்ளை பச்சை மெட்ரிக் தொன் Read More

Read more