அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (26/06/2022) முதல், சிறிய உணவுகள், கொத்து மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.

Read more

உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம்….. அசேல சம்பத்!!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார். உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியம் எனவும் உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், எரிவாயு கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். இல்லை என்றால் இன்று முதல் Read More

Read more