ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!

ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read more