இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Read more

ரம்புக்கனையில் விசேட அதிரடிப்படை,இராணுவம் குவிப்பு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டை அடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மா அதிபரி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டம் நடத்தியவர்கள் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அதனைத் தடுக்க காவல்துறையினர் பலத்தை பயன்படுத்தியதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.    

Read more

ரம்புக்கனை துப்பாக்கிசூடு -ஐநா, அமெரிக்கா மற்றும் கனடா கடும் கண்டனம்

ரம்புக்கனையில் இன்றையதினம் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு ஐ.நா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.    

Read more

ரம்புக்கனையில் கடும் பதற்றம் – ஊரடங்கு அமுல்

ரம்புக்கனை காவல்துறை பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை  தொடரும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ரம்புக்கனையில் புகையிரத கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து காவல்துறையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்ததுடன் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் தற்போது ஊரடங்கு Read More

Read more

ஊரடங்கு புறக்கணிப்பு-கொழும்பில் இன்றிரவு பல இடங்களில் மக்கள் போராட்டம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றிரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நுகேகொடையில் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மஹரகம மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read more